மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது? | Manapparai Sexual harassment of girl 4 people including school principal, husband arrested

Share

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் திருச்சி சரக காவல்துறை தலைவர் வருண்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் இருந்த மக்களைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தி கும்பலைக் கலைத்து போக்குவரத்தைச் சரி செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம் செய்தியாளர்களிடம், “பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேர் மீது புகார் வந்துள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம்

அதில், சுதா, வசந்தகுமார், செழியன் உள்ளிட்ட நான்கு பேரைத் தற்போது கைது செய்திருக்கிறோம். பள்ளியின் முதல்வரையும் இரவுக்குள் கைது செய்து விடுவோம். மேலும், இதுவே இந்த பள்ளி மீது வரும் முதல் புகார். இது போல் மேலும் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறும் நிலையில், அதற்கு உண்டான ஆவணங்களைப் புலன் விசாரணை செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று எஸ்.பி தெரிவித்தார்.

சிறுமி ஒருவருக்குப் பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், அந்த சிறுமியின் உறவினர்களை அதிர வைத்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com