2024 Thanjavur Rewind: பொங்கி வரும் காவேரி டு பெரியகோவில் கோபூஜை | Photo Album

Share

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஆயிரக்கணக்கான கிலோவிலான மலர்கள் கொண்டு அலங்காரம்.
குவைத் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டம் ஆதனூர் பகுதியைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய் என்ற இளைஞரின் நல்லடக்கம்.
தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் தமிழக அரசு சார்பில், டெல்டாவில் முதல்முறை இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட டைடல் பார்க்
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழாவுக்காக மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோவில்.
தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அ.ம.மு.க சார்பில் கண்டனப் பொதுக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் சிவனேசனை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.
தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். எழுதுவதற்கு விதைப்பந்தால் செய்யப்பட்ட பேனா, உண்பதற்குச் சிறு தானிய உணவு என இந்த வாக்கு சாவடியில் 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை கால்வாய் வழியாக தஞ்சை நகர் பகுதிக்கு வந்தடைந்தது.
கும்பகோணத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் கோட்டத்தில் உள்ள கருணாநிதி உருவ சிலையையும் திறந்து வைத்தார்..
தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அதற்கான சான்றிதழை பெற்ற எம்பி முரசொலி. அருகில் முன்னாள் எம்பி எஸ் எஸ் பழனி மாணிக்கம்.
2024 பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட முரசொலிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்ட கருப்பு முருகானந்தத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிள் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், சித்திரை தேரோட்டம் இந்தாண்டும் சிறப்பாக நடைபெற்றது.
பொங்கி வரும் காவேரி, ஆடி 18 முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் பெண்கள் மற்றும் புதுமண தம்பதியினர் வெகு விமர்சியாகக் கொண்டாடினார்
தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 2 டன் அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் நந்தியம் பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 108 கோபூஜை வழிபாடு நடைபெற்றது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், இந்த ஆண்டின் இறுதியான சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகத்தைக் காண குவிந்த பக்தர்கள்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com