மூன்றாவது இடத்தில் பஞ்சாமிர்தம் இருக்கிறது. பால், தயிர், நெய், தேன் மற்றும் சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து பூஜை மற்றும் பண்டிகை சமயங்களில் மட்டும் செய்யப்படும் பஞ்சாமிர்தம் மூன்றாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.
நான்காவது ஹகுசாய்… சிம்பிளாக சொல்லப்போனால் முட்டைகோஸ் ஊறுகாய். நாபா முட்டைகோஸ், கேரட், கடல்பாசியான கொம்பு (Kombu), கோஷர் சால்ட் ஆகியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் உணவு.
`தானிய பஞ்சிரி’ பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. பண்டிகைகள் மற்றும் விரதத்தின் போது ஊட்டச்சத்துக்காக இந்த உணவு கொடுக்கப்படும். தாமரை விதை என்றழைக்கப்படும் மக்கானாவுடன் (makhana) துருவிய தேங்காய், சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் உலர் பழங்களுடன் வறுத்த தனியாதூள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
ஆறாவது இடத்தில் கராஞ்சி (Karanji) இனிப்பு வகையும், ஏழாவது இடத்தில் திருவாதிரைக் களியும் இடம் பிடித்துள்ளன. எட்டாவது இடத்தில் உகாதி பச்சடி, ஒன்பதாவது இடத்தில் கொழுக்கட்டை, பத்தாவது இடத்தில் ரவா லட்டு ஆகியவை இருக்கின்றன.
இந்த பத்து ரெசிபிக்களில் நீங்கள் சாப்பிட நினைக்கும் உணவு என்ன?!… கமென்டில் சொல்லுங்கள்!