அவள் விகடன் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி அடுத்த கட்டமாக கும்பகோணத்தில் வரும் சனிக்கிழமை (நவ.25) நடைபெற உள்ளது.
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவையைத் தொடர்ந்து அடுத்ததாக கும்பகோணத்தில் போட்டி நடைபெற உள்ளது.

முதற்கட்ட போட்டி இரண்டு சுற்றாக நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சமைத்துக்கொண்டு வந்த உணவைக் காட்சிப்படுத்த வேண்டும்.
மெனு வடிவமைக்கப்படும் விதம், செய்முறை, காட்சிப்படுத்தும் விதம், சுவை மற்றும் பதம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்து பேர் அடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பேரும் இரண்டாம் சுற்றில் நேரடியாக சமையல் செய்ய வேண்டும். என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதை அந்த நேரத்தில் நடுவர் அறிவிப்பார்.
இரண்டாம் சுற்று சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், அடுப்பு, பொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் அவள் விகடனால் நிகழ்விடத்தில் வழங்கப்படும். நடுவர் கூறும் விதிமுறைகளைப் பின்பற்றி நேரடியாக சமைக்க வேண்டும்.

இரண்டாம் சுற்றில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து இதேபோல தேர்வான போட்டியாளர்களுடன் மாபெரும் சமையல் யுத்தத்தில் மோதுவார்கள்.
தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா இந்நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்று வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருள்கள் காத்திருக்கின்றன.

கும்பகோணம் மாநகரில் சாக்கோட்டை, மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள இதயா மகளிர் கல்லூரியில் போட்டி நவம்பர் 25-ம் தேதி போட்டி நடைபெறும். போட்டி நடைமுறைகள் காலை 8.30 மணியிலிருந்து தொடங்கும்.
கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

அனைத்துப் பாலினத்தவரும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கேற்கலாம். கலந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்யவும். அல்லது 97909 90404 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘SSS’ என்று மெசேஜ் அனுப்பியும் பெயரைப் பதிவு செய்யலாம்.