இளநீர் புடிங், பாலாடை பாயாசம், உளுந்தஞ்சோறு, கூட்டாஞ்சோறு, எள்ளு துவையல், எள்ளு உருண்டை, ஓலை கொழுக்கட்டை, ஜவ்வரிசியில் செய்த சபுதானா, வெத்தலை மில்க்ஷேக் என விதவிதமான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
குறிப்பாக நெல்லைப் பகுதியில், முதுகு தண்டுக்கு பலம் அளிக்கும் என்றும், குழந்தை பெற்ற மகளிருக்கு அளிக்கப்படும் உணவுமான மருந்து சோறும், காயல்பட்டினம் மாப்பிள்ளை விருந்தான மட்டன் தக்கடி போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர நண்டு லாலிபாப், மக்கானா கிரேவி, அன்னாசி பார்பிக்யூ, அன்னாசிப்பழ ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், இறால் 65, பருத்திப்பால் அல்வா போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி, கேரள எல்லையை ஒட்டிய மாவட்டம் என்பதால் கேரள உணவு வகைகளான கப்பக்கிழங்குயும் போட்டியில் இடம்பெற்றிருந்தது.