மருத்துவமனை சிகிச்சையில் மார்க் சக்கர்பர்க்… என்ன நடந்தது?!

Share

மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பர்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார்.

மருத்துவமனை படுக்கையில் இருக்கும் மார்க்கின் இடது கால் கட்டுப்போடப்பட்டு, சப்போர்ட்டுக்காக பிரேஸ் (leg brace) மாட்டப்பட்டுள்ளது. திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் பேசி வந்தனர்.

மார்க் ஜுக்கர்பெர்க்

இந்த நிலையில் மார்க் தனது இன்ஸ்டா பக்கத்தில், “ஒரு மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக்காக நான் பயிற்சி பெற்றேன். அடுத்த வருட ஆரம்பத்தில் நடக்கவிருக்கும் அது தொடர்பான போட்டிக்காகப் பயிற்சி பெற்ற போது, முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனக்கு முழங்காலில் தசைநார் சிதைவு (Anterior Cruciate Ligament injury) ஏற்பட்டதால் அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னைக் கவனித்துக் கொண்ட மருத்துவர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி. ஆனால் அது இப்போது தாமதமானது.

நான் குணமடைந்த பிறகு பயிற்சியைத் தொடரும் ஆவலுடன் இருக்கிறேன். அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார். மார்க் மீண்டு வர பலரும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

“முழங்கால் மூட்டை உறுதிப்படுத்த உதவும் இரண்டு குறுக்கு வடிவ தசைநார்களில் முன்புற குறுக்கு தசைநாரும் (anterior cruciate ligament) ஒன்று. இந்த தசைநார் சிதைவு பொதுவாகவே கால்பந்து, கூடைப்பந்து விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகிறது. திடீரென குதித்து நிற்கும் போது இப்பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பாதிக்கப்பட்டவருக்குப் போதுமான ஓய்வு, ஐஸ் ஒத்தடம், பாதிக்கப்பட்ட முழங்காலுக்கு அழுத்தம் தருவது, காலை உயர்த்தி வைப்பது போன்ற `RICE தெரபி’ வழங்கப்படும்” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.    

ஒரு வருடத்திற்கும் மேலாக பிரேசிலியன் ஜியு-ஜிட்சு (Brazilian Jiu-Jitsu) என்ற தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றுள்ளார், மார்க். இந்த ஆண்டு ஜூலை மாதம், அவரது பயிற்சியாளரால் பிரேசிலிய ஜியு-ஜிட்சுவில் அவருக்கு நீல பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com