Doctor Vikatan: நெஞ்சை அடைக்கும் உணவு… காரணமும் தீர்வுகளும் என்ன? | Heartburn; What are the causes and solutions?

Share

Doctor Vikatan: என் வயது 40. சாப்பிடும்போது சில நேரங்களில் உணவு, தொண்டைக்குழியிலேயே நிற்பதைப்போல் உணர்கிறேன். இது இரண்டு, மூன்று நாள்கள் தொடர்கிறது. இதற்கு காரணம் என்ன… தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்தி

ஸ்ரீவத்சன் குருமூர்த்தி

ஸ்ரீவத்சன் குருமூர்த்தி

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது” Gastroesophageal reflux disease (GERD) ‘என்ற பிரச்னையாக இருக்கலாம் என்பது தெரிகிறது. அதாவது உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகிற வால்வானது லூஸாகி இருப்பதால், நீங்கள் சாப்பிடுகிற உணவானது மேல்நோக்கி எதுக்களித்துக்கொண்டு வரும்.

இந்தப் பிரச்னையின் காரணமாக சிலருக்கு உணவை விழுங்கும்போது அசௌகர்யம் ஏற்படலாம். உணவை விழுங்கும்போது இப்படிப்பட்ட உணர்வு தொடர்ந்தால் அவர்கள் வயிறு, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எண்டோஸ்கோப்பி எனப்படுகிற சோதனையைச் செய்து பார்க்க வேண்டும்.

இந்தச் சோதனையின் மூலம் உணவுக்குழாயில் ஏதேனும் அடைப்போ, பிரச்னையோ இருக்கிறதா, உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகும் வால்வு எப்படியிருக்கிறது, அது சரியாகத் திறந்துகொள்கிறதா, அந்த இடத்தில் அமிலம் எதுக்களிப்பது நடக்கிறதா, இரைப்பையில் ஏதும் புண்கள் இருக்கின்றனவா, கட்டி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com