Doctor Vikatan: இரண்டு பிரச்னைகள்… ஒரே நேரத்தில் இருவேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது சரியானதா?|Is it right to take two different antibiotics at the same time?

Share

ஆன்டிபயாடிக் எடுப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பொறுத்தவரை அவற்றை ஐந்து நாள்கள், பத்து நாள்கள் எடுக்க வேண்டும் என ஒரு விதி உண்டு.

மருத்துவர் குறிப்பிடும் நாள்களுக்கு அந்த ஆன்டிபயாடிக்கை எடுத்து முடித்துவிட வேண்டும். பிரச்னை சரியாகிவிட்டதே என அதைப் பாதியிலேயே நிறுத்தினால், அடுத்த முறை அந்த ஆன்டிபயாடிக் உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். அதைவிட வீரியமான ஆன்டிபயாடிக் உங்களுக்குத் தேவைப்படலாம்.

எனவே உங்கள் பொது மருத்துவர் அறிவுறுத்தியபடி இரண்டு ஆன்டிபயாடிக்குகளையும் எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. அவர் இரண்டு ஆன்டிபயாடிக்குகளின் தன்மையையும் வீரியத்தையும் பார்த்துதான் உங்களுக்கு அப்படி அறிவுறுத்தியிருப்பார். எனவே இரண்டையும் மருத்துவர் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுத்து முடித்துவிடுவதுதான் நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com