வயதாக, ஆக பெண்களுக்கு அவர்களது உடலின் அத்தியாவசிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறையத் தொடங்கும். அதுவும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம். இப்படிப்பட்ட நிலையில் இந்தப் பிரச்னைக்கு அறுவைசிகிச்சைதான் தீர்வாக பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பல பெண்களுக்கும் அதில் உடன்பாடு இருப்பதில்லை.
இப்படிப்பட்ட பெண்களுக்காகவே லேட்டஸ்ட் சிகிச்சை ஒன்று வந்திருக்கிறது. அந்தச் சிகிச்சைக்கு “தெர்மிவா’ என்று பெயர். இதில் அறுவைசிகிச்சையே தேவையில்லாமல் வெஜைனா பகுதியின் தளர்வு சரிசெய்யப்படும்.
இதை ‘காபி பிரேக்’ நடைமுறை (coffeebreak procedure) என்றே சொல்லலாம். அவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சிகிச்சை இது. இந்த முறையில் வெஜைனா பகுதியின் திசுக்களில் ரேடியோ ஃப்ரீக்வன்சி மின்சாரம் செலுத்தப்பட்டு புத்துணர்வளிக்கப்படும். இந்த முறையில், தளர்ந்துபோன வெஜைனா பகுதியில் கொலாஜென் செலுத்தப்பட்டு, அந்தத் தசைகளும் டைட்டாக்கப்படும். இந்தச் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டியதில்லை. மயக்க மருந்து கொடுக்காமலேயே எளிமையாகச் செய்யப்படுகிற சிகிச்சை இது. பெயின் கில்லர்கூட பரிந்துரைக்கப்படாது. எனவே இது குறித்து உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.