சுவையான நேபாள சிக்கன் சோய்லா… 30 நிமிடங்களில் வீட்டிலேயே செய்ய ரெசிபி..!

Share

 சிக்கன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. பொதுவாக சிக்கனை தென்னிந்திய பாணியில் குழம்பு, பிரை , கோப்தா செய்து சாப்பிட்டிருப்போம். அது போர் அடிக்கும்நேரத்தில் வேறு எந்த பாணியில் இதை செய்து சாப்பிடலாம் என்ற யோசனை எழும். அப்படி தோன்றும் நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவைத்தான் கொண்டு வந்துள்ளோம்.

சிக்கன் சோய்லா என்பது பாரம்பரிய நெவாரி பாணியிலான உலர் சிக்கன் வைத்து செய்யக்கூடிய உணவாகும், இது பெரும்பாலும் பசியை உண்டாக்கும் ஸ்டார்டர் உணவாக அல்லது சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது. இந்த உணவு பாரம்பரியமாக வறுக்கப்பட்ட அல்லது பார்பிக்யூ செய்யப்பட்ட கோழியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வீட்டில் 20-30 நிமிடங்களுக்குள் இந்த உணவை தயாரிக்கும் வழிமுறைகளை இப்போது சொல்கிறோம்..

நேபாள சிக்கன் சோய்லா செய்யத் தேவையான பொருட்கள்: 

  • 1 கிலோ எலும்பு இல்லாத கோழி (சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது)

  • 1 கப் புதிய கொத்தமல்லி (அலங்கரிக்க)

  • 7-8 பூண்டு பற்கள் , நறுக்கியது

  • 2-3 பச்சை மிளகாய், நறுக்கியது

  • 1 டீஸ்பூன் இஞ்சி, நறுக்கியது

  • 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்

  • 1 தேக்கரண்டி மிளகாய் பிளெக்ஸ்

  • 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது

  • 1 டீஸ்பூன் சீரக தூள்

  • 1-2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

  • ருசிக்கேற்ப உப்பு

டெம்பரிங் செய்ய தேவையான பொருட்கள்:

  • 3 டீஸ்பூன் கடுகு எண்ணெய்

  • 1 தேக்கரண்டி வெந்தய விதைகள்

  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

நேபாள சிக்கன் சோய்லா செய்முறை:

கோழியை சுத்தம் செய்து மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு கிரில்லை எடுத்து, அதில் சிறிது எண்ணெய் தடவி, சிக்கன் துண்டுகளைப் போடவும். கோழி சமைக்கும் வரை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் கிரில்லில் சமைக்கவும். கிரில் இல்லையென்றால், சூடான கடாயில் சிறிது எண்ணெய் தடவி, அதில் சிக்கனை சமைக்கலாம்.

News18

சமைத்த கோழி துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்திற்கு  மாற்றவும்.
அதில் இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், மிளகு, கொத்தமல்லி தூள், சீரக தூள், உப்பு மற்றும் பிற மசாலாக்களை சேர்க்கவும். இப்போது சூடான கடாயில் கடுகு எண்ணெய், மஞ்சள்  மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.அதை அடுப்பிலிருந்து இறக்கி, சிக்கன் மற்றும் மசாலா கலவையில் சூடான டெம்பரிங் ஊற்றவும்.இதை சிக்கனுடன் நன்கு கலந்து தனியாக ஊற வைக்கவும்.

விளம்பரம்

இதையும் பாருங்க: 
மன அழுத்தம் முதல் சோர்வு வரை… ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ற 5 தேநீர் வகைகள்..!

எல்லாவற்றையும் சரியாகக் கலந்து 10 நிமிடங்களுக்கு ஊறினால் உங்கள் டிஷ் ரெடி. ஊற ஊற கோழி அனைத்து சுவைகளையும் உறிஞ்சிவிடும். நேரம் ஆக ஆக இதன் சுவை கூடும். அதன்மேல் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். இதை ரொட்டி அல்லது  சாதத்துடன் சூடாக பரிமாறவும்.  இதை சாப்பிட்ட பிறகு மற்ற சிக்கன் உணவுகளை நிச்சயம் மறந்தே விடுவீர்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com