அதற்காக தினமும் கரும்புச்சாறு குடிப்பது அறிவுறுத்தக்கூடியதல்ல. பொதுவாக மஞ்சள்காமாலை பாதிப்பின்போது கரும்புச்சாறு குடிக்கச் சொல்வார்கள். கல்லீரலில் தொற்று, வேறு பாதிப்புகள் ஏற்படும்போது, மஞ்சள் காமாலை தீவிரமாக இருக்கும்போது கரும்புச்சாறு குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள். உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்து, பாதிக்கப்பட்ட கல்லீரல் சீரடைவதற்காக இதைக் குடிக்கச் சொல்வார்கள்.
சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்கள் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சர்க்கரை சராசரி அளவு அதிகமாக இருப்பவர்கள் இதைக் குடிக்கவே கூடாது.
பொதுவாகவே மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் யாரையும் ஜூஸ் குடிக்கச் சொல்ல மாட்டார்கள். பழமாகச் சாப்பிடும்போதுதான் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். பழங்களில் ஃப்ரக்டோஸ் என்ற வடிவில் சர்க்கரைச்சத்து இருக்கும். கரும்பில் சுக்ரோஸ் என்ற பெயரில் இருக்கும். தினமுமோ, வாரத்துக்கொரு முறையோ கரும்புச்சாறு குடிக்கக்கூடாது. வயது, சர்க்கரைநோயாளியா, உடலுழைப்பு எப்படிப்பட்டது என்பதையெல்லாம் பொறுத்து எப்போதாவது கரும்புச்சாறு குடிக்கலாம்.
அதீத களைப்புடன் இருக்கும்நிலையில் உடனடியாக எனர்ஜி தேவை என்கிறவர்கள் கரும்புச்சாறு குடிக்கலாம். அவர்கள் சர்க்கரைநோயாளிகளாக இருக்கக்கூடாது. மற்றபடி இதை ஆரோக்கியமான ஜூஸாக நினைத்து அடிக்கடி குடிப்பதெல்லாம் தேவையற்றது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.