Daily Archives: October 10, 2023

ஆண்கள் ஏன் `பெடிக்யூர்’ செய்துகொள்ள வேண்டும்..? | Legs and feet should be beautiful; Men should get pedicures

செம்ம லுக்…தொடர்ந்து பெடிக்யூர் செய்துக்கொள்வதால் உங்கள் கால்கள் பொலிவுடன் காணப்படும். மேலும், உங்கள் கால்களை கடினமாகவும், வறண்டு போக விடாமலும் பார்த்துக்கொள்ளும். நீங்கள் மாதத்திற்கு இருமுறை பெடிக்யூர் செய்துகொள்ளும் பட்சத்தில் அது உங்கள் கால்களை நீண்ட காலங்களுக்கு அழகானதாக வைத்துக்கொள்ள உதவும்.பெரும்பாலும் பெடிக்யூர் ட்ரீட்மென்டில் அரோமாதெரபியை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பயன்படுத்தப்படும் நறுமண தைலங்கள் உங்களுள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி மனதை இலகுவாக்குகின்றன. மேலும், உங்கள் மன அழுத்தங்கள் பறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள அரோமாதெரபி உதவுகிறது.…

விதிகளை மீற வைத்த அசோகா அல்வா! – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 9 | My Vikatan | My Vikatan article about diabetes food habits

இன்னும் ஒரு வழக்கம் மேற்கொண்டேன். அலுவலகத்தில் ஏதாவது ஒரு நிகழ்வின் போது ஸ்வீட் காரம் கொடுப்பார்கள் அல்லவா.. முடிந்த வரை அதை முழுதாக வீட்டுக்கு எடுத்து வந்து எல்லோரும் ஆளுக்குச் சிறிது எனப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் தான் அது. அதில் குழந்தைகள் விரும்பினால் அவர்களுக்குத் தானே அதிகம் கொடுப்போம்… இதன் பிறகு அவரும் அதே மாதிரி கொண்டு வர ஆரம்பித்தார். அப்படியே வெளியில் இனிப்பு ஏதேனும் சாப்பிட்டிருந்தால் கூட என்னிடம் சொல்வதும் இயல்பாகி விட்டது.நெல்லை அல்வாஎன்…

வைட்டமின் சி: கை, கால் வலி போக்குவது முதல் காயங்களை ஆற்றுவது வரை… | Vitamin C: From relieving pain in hands and feet to healing wounds

சரும அழகிலும் ஆரோக்கியத்திலும் வைட்டமின் சியின் பங்கு அவசியமானது. சரும செல்கள் தினமும் உதிர்ந்து, புதிதாக உருவாகும். அந்தச் செயலைச் சரியாகச் செய்யவும் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் வைட்டமின் சி சத்து அவசியமாகிறது. எலும்புகளின் இடையே `கார்ட்டிலேஜ்” எனப்படும் ஜவ்வுப்பகுதியானது குஷன்போல பாதுகாப்பாக இருக்கும்.  வயதாக ஆக இந்த ஜவ்வு தேய்ந்து, எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசி, மூட்டுவலி, கை, கால்களில் வலி ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின்-சி மிக மிக அவசியம்.இரும்புச்சத்து கால்சியம்…

லால் மாஸ் முதல் ரோகன் ஜோஷ் வரை… இந்திய மாநிலங்களின் 5 சுவையான மட்டன் உணவுகள்..!

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையில் மட்டன் சுவையேற்றப் படுகிறது. நன்றி

Doctor Vikatan: கரும்பு ஜூஸ் ஆரோக்கியமானதா… சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா? |Doctor Vikatan: Is it healthy to drink sugarcane juice?

அதற்காக தினமும் கரும்புச்சாறு குடிப்பது அறிவுறுத்தக்கூடியதல்ல. பொதுவாக மஞ்சள்காமாலை பாதிப்பின்போது கரும்புச்சாறு குடிக்கச் சொல்வார்கள். கல்லீரலில் தொற்று, வேறு பாதிப்புகள் ஏற்படும்போது, மஞ்சள் காமாலை தீவிரமாக இருக்கும்போது கரும்புச்சாறு குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள். உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்து, பாதிக்கப்பட்ட கல்லீரல் சீரடைவதற்காக இதைக் குடிக்கச் சொல்வார்கள்.சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்கள் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சர்க்கரை சராசரி அளவு அதிகமாக இருப்பவர்கள் இதைக் குடிக்கவே கூடாது.பொதுவாகவே மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் யாரையும் ஜூஸ் குடிக்கச் சொல்ல மாட்டார்கள். பழமாகச் சாப்பிடும்போதுதான் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.  பழங்களில்…

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முருங்கைக்காயை ஏன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் தெரியுமா..?

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்த குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் தான் முருங்கை. இதில் உள்ள ஆன்டிவைரல், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே தான் இவற்றை நாம் நம்முடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். இதோ சர்க்கரை நோய் உள்ளவர்கள் முருங்கையை…