ஆன்லைன் கேம், அனிமேஷன் தொடர்… உளவியல் சிக்கலில் சிக்கிய மாணவன்; மருத்துவமனையில் அனுமதித்த தாய்!

Share

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒரு மாணவன், பூந்தமல்லிப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்றுவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த மாணவனின் தந்தை இறந்துவிட்டார். அண்ணனும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்துவருகிறார். இதனால், தாயுடன் மாணவன் வசித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டிலுள்ள தனது அறையை எப்போதும் பூட்டிக்கொண்டு லேப்டாப் மற்றும் செல்போனில் ஆன்லைன் கேம் மற்றும் அனிமேஷன் தொடர்களைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாராம் அந்த மாணவன்.

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன்

ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் மிகப் பிரபலமான ‘ஜுஜுட்சு கைசென்’ என்ற தொடரை மாணவன் விரும்பிப் பார்த்திருக்கிறான். அதில் வரும் ‘சாபங்களின் ராஜா’ என்ற கதாபாத்திரம் கொண்ட இரண்டு முகங்கள், நான்கு கைகள் கொண்ட ‘ரியோமென் சுகுனா’ என்ற கொடூரமான கதாபாத்திரம், மாணவனை ஈர்க்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த மாணவனின் சொந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் பகுதி எனவும் கூறப்படுகிறது.

மலையாளம் கலந்த தமிழ்மொழியை இந்த மாணவன் பேசுவதையும், அவர் கல்லூரியில் பயிலும் சக மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பெரும்பாலும் யாரிடமும் பேசாமல் தனிமையை விரும்பிய அந்த மாணவன், தன்னை ‘ரியோமென் சுகுனா’ கதாபாத்திரமாக நினைக்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

தந்தை மரணம், வெளிநாட்டில் அண்ணன், தனி அறை போன்ற சூழலும் மாணவனுக்கு மனச்சிதைவை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில், தாயிடமும் சரிவர பேசாமலிருந்த மாணவன், நேற்றைய தினம் திடீரென வீட்டில் இருந்த பொருள்களை தூக்கிப்போட்டு உடைத்தும், அடித்து நொறுக்கியும் அட்டகாசம் செய்திருக்கிறார். தடுக்க முயன்ற தாயிடமும், சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினரிடமும்கூட ஆபாசமாகப் பேசி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டிருக்கிறார்.

ரியோமென் சுகுனா கதாபாத்திரம்

இதையடுத்து, மாணவனின் கை, கால்களைக் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிலர் உதவியுடன் தூக்கிக்கொண்டு வந்தார் தாய். மருத்துவர்களிடமும் கோபம் காட்டிய மாணவன், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த மருத்துவர்கள், கை கால்களைக் கட்டியபடியே ஆம்புலன்ஸில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முயன்றனர். ஆம்புலன்ஸிலும் மாணவனின் செயல்பாடுகள் வெறிப்பிடித்தார்போல இருந்ததால், உதவிக்கு உறவினர் ஒருவர் ஏறிச்சென்றார். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com