சக்கரவள்ளிக்கிழங்கு இருக்கா..? அப்போ இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிஷ் வீட்டிலேயே செய்யலாமே

Share

கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி,கோகுலாஷ்டமி என்று அடுத்தடுத்து விழாக்களாக முடிந்த நிலையில் அடுத்து தசரா , தீபாவளி எல்லாம் அடுத்த மாதத்திற்கு  வரிசை கட்டி நிற்கிறது. விழாக்காலம் என்றால் பலகாரம் இல்லாமல் எப்படி? பொதுவாக பலகாரம் என்றால் முறுக்கு சீடை, போளி, அதிரசம், சோமாஸ் போன்றவற்றை தான் செய்வோம்.

அதோடு கூடுதலாக இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப பை pie போன்ற உயர்தர உணவகங்களில் செய்யக்கூடிய டிஷ்களை வீட்டில் செய்ய ஆர்வம் இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். அருகில் உள்ள கடைகளில் வாங்கக்கூடிய பொருட்களை வைத்து சுவையான சக்கரவல்லி கிழங்கு வைத்து செய்யும் பை டிஷ் பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

இதை  ஓவன் இருந்தால் தானே செய்யமுடியும் என்று எல்லாம் நீங்கள் வருந்த வேண்டாம். பட்ஜெட் ஓவன் குக்கர் இருக்கும் பொது கவலை எதற்கு. அதில் செய்யும் செயல்முறையையும் உங்களுக்கு எளிமையாக சொல்கிறோம்.

சக்கரவள்ளிக்கிழங்கு  பை செய்யத் தேவையான பொருட்கள்:

450 கிராம் சக்கரவள்ளிக்கிழங்கு

150 கிராம் கண்டென்ஸ்ட் பால்

1 டீஸ்பூன் சர்க்கரை

1 சிறிய முட்டை

ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை

மார்ஷ்மெல்லோ- அலங்கரிக்க

பை மாவிற்கு

350 கிராம் மைதா மாவு

1 தேக்கரண்டி உப்பு

275 கிராம் வெண்ணெய்

5 டீஸ்பூன் ஐஸ் குளிர்ந்த நீர்

1 முட்டை, பிசைந்தது

சக்கரவள்ளிக்கிழங்கு  பை செய்முறை:

சக்கரவள்ளிக்கிழங்கு முற்றிலும் மென்மையாகும் வரை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். அவை மிகவும் மென்மையாக இருக்க வேண்டும். வெந்ததும் அதை ஆறவைத்து தோலை ஊறவைத்து  பின்னர் கிழங்கை ஒரு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள பொருட்களையும் பேஸ்ட்டில் கலந்து, அனைத்தும் மென்மையாகவும்வரை நன்றாக கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.

பை மாவிற்கு:

முதலில், மிக்சியில்  மைதா மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெயை சம அளவிலான க்யூப்ஸாக வெட்டி, அவற்றைமாவின்  மேல் சமமாக வைக்கவும், பின்னர் அதை மெதுவாக கலக்கவும். மாவு பிசுபிசுப்பாகவும் கொஞ்ச ஈரமாகவும் மாறும் வரை இதே செயல்முறையைத் தொடரவும். அதே போல கட்டி இல்லாமல் அணைத்து மாவும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

இப்போது மாவை மிக்சியில் இருந்து எடுத்து சமையலறை கல்லில் கொஞ்சம்வறண்ட மாவைக் கொட்டி அதன் மேல் வைத்து  குளிர்ந்த நீரை கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை நன்றாக மடித்து பிசையவும். இப்போது மாவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும் . ஒரு பையின் அடிப்பகுதி மற்றும்  மேல் பகுதிக்கு என்று பிரித்து வைக்கவும்.

இதையும் பாருங்க : குழந்தைகளுக்கு என்ன செய்துகொடுப்பது என்று யோசிக்கிறீங்களா..? இதோ உங்களுக்காக சூப்பர் ரெசிபி

இதை தட்டு போல முதலில் செய்து அதை குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர் மாவை வெளியே கொண்டு வந்து, கொஞ்சம் மெல்லியதாக தேய்ந்து சப்பாத்தி போல தேய்க்கவும்.. பின்னர் பேக்கிங் செய்யும் பாத்திரத்தில் வெண்ணை தடவி அதில் தேய்த்த மாவை பாத்திரத்தின் வடிவில் உள்ள வைக்கவும்.

அதை விளிம்பில் தொங்க விடவும். ஒரு முட்கரண்டி கொண்டு அதை முழுவதுமாக குத்தவும். பின்னர் உள்ளே , நாம் முன்னர் செய்து வைத்த நிரப்புதல் கலவையை முழுமையாக  நிரப்பி சுமார் 50 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை அதை குளிர்விக்கவும்.

பின்னர் இரண்டாவது மாவை அதே போல செய்து இந்த நிரப்புதல் மேலே வைத்து மேலோடு ஒன்றை உருவாக்கவும். பேஸ்ட்ரியின் மேல் முட்டையை லேசாகத் தடவவும்., மேலும் மேலே உள்ள மாவை போர்க் வைத்து குத்தியோ நான்கு துண்டுகளாக வெட்டியோ அலங்கரிக்கலாம். பின்னர் இதை ஓவனில் பொன்னிறமாகும் வரை 400 டிகிரிக்கு சுமார் ஒரு மணி நேரம் வெக்கை வைக்கவும்

இதுவே குக்களாக இருந்தால் அதை வைக்கும் முன்னர் 20 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து, அதன் பின்னர் மிதமான தீவில் 1 மணி நேரம் வேகா வைக்கவும். எடுக்கும் முன்னர் ஒரு சிறிய கத்தியை வைத்து உள்ளே குத்திப்பார்த்தால் ஒட்டாமல் இருக்க வேண்டும். இப்போது உங்கள் சக்கரவள்ளிக்கிழங்கு பை தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com