வழக்கமான சிகிச்சை உத்திகளோடு ஒப்பிடுகையில், அதிக துல்லியமான, பயனளிக்கும் சிகிச்சையை வழங்கவும் மிக மிக குறைவான பக்க விளைவுகள் என்ற கூடுதல் ஆதாயத்தை தரவும் சிகிச்சையையும், நோயறிதல் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு புரட்சிகர அணுகுமுறையான Theranostics என்பதை புற்றுநோய் சிகிச்சை செயல்முறைகளில் திறம்பட இணைந்திருப்பதிலும் ACC நம் நாட்டில் முதன்மை வகிக்கிறது. சிகிச்சையில் உயர்தரம் மற்றும் புத்தாக்கத்தின் மீது கொண்டிருக்கும் இதன் உறுதிக்கு எடுத்துக்காட்டாக 1993-ம் ஆண்டில், இந்தியாவில் கோபால்ட் தெரபியை முதன் முறையாக ACC, சென்னை அறிமுகம் செய்தது. இந்த வடிவிலான கதிர்வீச்சு சிகிச்சை, உயர் ஆற்றல் கொண்ட கதிர்வீச்சின் மூலம் புற்றுநோய் செல்களை துல்லியமாக அழிக்கிறது. அப்போலோவின் புத்தாக்க சாதனைகள் அடங்கிய பயணத்தில் இதுவொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர். பிரதாப் சி. ரெட்டி, இந்நிகழ்வில் கூறியதாவது: “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் – ஐ நிறுவ நான் திட்டமிட்டபோது, புற்றுநோயை வென்று, உயர்தர வாழ்க்கையை நடத்த நோயாளிகள் திறனதிகாரம் பெறும் வகையில், கனிவான, நவீன, மேம்பட்ட சிகிச்சையை வழங்கும் திறன் கொண்ட ஒரு உலகத்தரத்திலான புற்றுநோய் மையத்தை உருவாக்க வேண்டுமென்ற கனவு அதன் பின்னணியில் இருந்தது. இன்றைய தினம், ACC – ன் 30 ஆண்டுகள் நிறைவை நாங்கள் கொண்டாடும் போது, இந்த கனவும், தொலைநோக்குப் பார்வையும் நிஜமாக, யதார்த்தமாக மாற்றமடைந்திருப்பதை காணும்போது எனது மனதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் நிறைந்திருக்கிறது.
புற்றுநோயை கண்டறியும் செயல்முறை, சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கான பராமரிப்பு ஆகியவற்றை புரட்சிகரமானதாக மாற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்று செயல்படுத்துவதில் ACC எப்போதும் முன்னோடியாக செயல்பட்டிருக்கிறது. தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நோயாளியின் நலனை மையமாக கொண்ட பராமரிப்பு ஆகியவை மீதான எமது வலுவான பொறுப்புறுதி, புற்றுநோய் சிகிச்சை துறையில் பெரும் சாதனையாளர் என்ற ACC – ன் அந்தஸ்தை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் நம்பிக்கையையும், மனஉறுதியையும் வழங்கி, சிகிச்சையின் மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் சேவையில் நாட்டில் ACC முதலிடம் வகிக்கிறது.”