`Corona-வைவிட ஆபத்தான நோய்த்தொற்று; 50 மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும்!' – எச்சரிக்கும் நிபுணர்

Share

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றுபோல மற்றொரு வைரஸ் தொற்று ஏற்படலாம் என பிரிட்டனின் கொரோனா வேக்ஸின் டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் எனும் நிபுணர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “2019-ம் ஆண்டு பெரும் பீதியைக் கிளப்பிய கொரோனா வைரஸ் தீவிரமாகவில்லை. ஒருவேளை அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்திருக்கும். தற்போது, கொரோனா தொற்றைவிட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அடுத்த தொற்று உருவாகியிருக்கிறது.

கொரோனா வைரஸ்

அதன் பாதிப்பால் 50 மில்லியன் மக்கள் வரை உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு அந்த தொற்றுநோயை `டிசீஸ் எக்ஸ்’ (Disease X) என்று அழைக்கிறது. இந்த புதிய டிசீஸ் எக்ஸ் கொரோனாவைவிட ஏழு மடங்கு ஆபத்தாக இருக்கலாம். இந்தத் தொற்று ஏற்கெனவே நமக்கு மத்தியில் இருக்கும் வைரஸிலிருந்து உருவாக வாய்ப்புகள் அதிகம். கடந்த நூற்றாண்டில் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக அப்போது சுமார் 5 கோடிப் பேர் உயிரிழந்தனர். அதற்கு இணையான பாதிப்பை இந்தப் புதுத் தொற்று ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

இப்போது 25 வைரஸ் பிரிவுகளிலும் கண்காணித்துவருகிறோம். இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று உருமாறினாலும் அது பெருந்தொற்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும்போது பாதிப்பு மிக மோசமாக இருக்கும். இப்படியெல்லாம் ஏற்படுமா எனக் கேட்காதீர்கள். நிச்சயம் ஏற்படும். இந்தச் சூழலைச் சமாளிக்க வேண்டுமானால், உலக நாடுகள் தற்போதிலிருந்தே தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என எச்சரித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com