Doctor Vikatan: இசிஜி, எக்கோ நார்மல்… ஆனாலும் நடக்கும்போது முதுகில் வலி… இதயநோயாக இருக்குமா? | Doctor Vikatan: back pain while walking…could it be heart disease?

Share

Doctor Vikatan: என் வயது 42. நான் திருப்பூரில் பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதற்காக நடைப்பயிற்சி செய்யும் போதும், வேறு சாதாரண கடினமில்லாத வேலைகள் செய்யும் போதும் மேல் முதுகின் நடுவில் மிகக் கடுமையான வலி ஏற்படுகிறது. பிறகு அந்த வலி பரவி முன் நெஞ்சுப் பகுதிக்கு வருகிறது. அந்த வலி வாய்வு பிடித்த வலியைப் போல் இருக்கும்.

ECG, Echo test, முதுகுத்தண்டுக்கான முழுமையான MRI scan எடுத்துப் பார்த்துவிட்டேன். மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்த பிறகும் அந்த வலி சிறிதளவும் குறையவில்லை. இரவில் படுக்கும் போது தூங்கவிடாமல் அந்த வலி மிக அதிகமாக இருக்கிறது. பெரியவர் ஒருவரின் ஆலோசனையில் வேக வைத்த பூண்டு சாப்பிட்டு சுடுநீர் குடித்தேன். வலி கொஞ்சம் கட்டுப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது நடக்கும்போதும் வேறு வேலைகள் செயயும் போதும் அந்த வலி வருகிறது.

எனக்கு என்ன பிரச்னை? நான் எந்த மருத்துவரை அணுகுவது?

– Periyasamy. விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

42 வயதில் ரத்த அழுத்தமும் கொலஸ்ட்ரால் பாதிப்பும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சாதாரண வேலைகளைச் செய்யும்போதும் வலியை உணர்வதாகச் சொல்கிறீர்கள். மருத்துவராக இதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு இதயநோய் இருப்பதற்கான ரிஸ்க் அதிகமிருப்பதாகத் தெரிகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com