இரவு உணவுக்கு என செய்வது என்பதே பெரிய தலைவலி. இட்லி, தோசை, சப்பாத்தியை செய்து போர் அடிக்கும். வித்தியாசமாக கடையில் எதாவது வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அதுவே மாத கடைசி ஆகிவிட்டால், இருக்கும் பட்ஜெட் வைத்து எங்கே வெளியே சாப்பிடுவது? அப்போது வெளியில் சாப்பிட்ட டிஷ்களை வீட்டிலேயே செய்தால் என்ன என்ற எண்ணம் எழும்.
அப்படி யோசிக்கும்போது என்ன செய்வது? எதை வீட்டில் எளிமையாக செய்யமுடியும். சுவையாகவும் இருக்க வேண்டும், அதிகம் செலவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்று கணக்கு போடுவோம். அதற்கு தான் ஒரு ரெசிபியை உங்களுக்காக எடுத்து வந்துள்ளோம்.
ரோல் வகையான உணவுகள் இப்போது அதிகம் பிரபலமாகி வருகிறது. சப்பாத்தி அல்லது பராத்தாவிற்கு நடுவில் காய்கறி அல்லது இறைச்சி வைத்து சுவையான மசாலைகளோடு பரிமாறப்படுவது தான் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இந்த வகையான உணவு தான் இன்றைய ரெசிபி. என்ன ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தந்தூரி சிக்கன் கத்தி ரோல் தேவையான பொருட்கள்
- 350 கிராம் எலும்பு இல்லாத கோழி
- ¾ கப் தயிர்
- 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 தேக்கரண்டி தந்தூரி மசாலா
- 1 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் சீரக தூள்
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
- ½ தேக்கரண்டி மஞ்சள்தூள்
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- உப்பு, சுவைக்க
- 2-3 சப்பாத்தி
- 1 வெங்காயம், வெட்டப்பட்டது
- 1 தக்காளி, வெட்டப்பட்டது
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை
தந்தூரி சிக்கன் கத்தி ரோல் செய்முறை:
முதலில் , ஒரு கிண்ணத்தில் தந்தூரி மசாலா, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து அதோடு தயிர் கலந்து அதில் எலும்பு இல்லாத கோழித் துண்டுகளைச் சேர்த்து, கோங்கம் எண்ணெயைச் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.கிண்ணத்தை ஒரு துணியால் மூடி, கோழியை குறைந்தது 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்து கோழியை தந்தூரி போல சமைக்க இந்த ஓவன் இருந்தால் 180 டிகிரிக்கு ப்ரீஹீட் செய்துகொள்ளவும். கரி கிடைக்கும் மக்கள் அந்த அனலை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் இல்லாதவர்கள் சாதாரண அடிப்பேன் நெருப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மாரினேட் செய்யப்பட்ட கோழியை skewers அல்லது ஒரு கம்பியில் செருகவும். 15-20 நிமிடங்கள் வரை நன்கு சமைக்கவும்.நெருப்பு அல்லது அணையை பொறுத்து நேரம் மாறுபடலாம்.
இதையும் பாருங்க : மாலை நேரம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சிந்தி ஸ்நாக்ஸ் ரெசிபி..!
இப்போது சப்பாத்தியை ஒரு தவாவில் சூடாக்கவும். தந்தூரி சிக்கனை மையத்தில் வைத்து, அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் போடவும். கூடுதல் சுவைக்காக கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்தும் செய்யலாம். அதில் உள்ள பொருட்கள் வெளியே வராமல் சுருட்டி புதினா சட்னியுடன் பரிமாறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.