Doctor Vikatan: இரண்டு பீரியட்ஸுக்கு இடையில் ப்ளீடிங்… பயப்பட வேண்டிய பிரச்னையா? | Doctor Vikatan: Bleeding between two periods… What is the solution?

Share

கர்ப்பமான நிலையில் ப்ளீடிங் ஆனால் கருக்கலைந்து விடுமோ என பயப்படத் தேவையில்லை. சில மருத்துவ சிகிச்சைகளும் பூரண ஓய்வும் இவர்களுக்குத் தேவைப்படும். பிறப்புறுப்பில் ஏற்படுகிற இன்ஃபெக்ஷன் காரணமாகவும் ப்ளீடிங் ஆகலாம். அந்தத் தொற்றானது சிறுநீர்ப்பாதை, அதற்கு மேல் பகுதி என பரவினாலும் ப்ளீடிங் ஆகும். இதை ‘பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்’ என்று குறிப்பிடுவோம். எனவே இன்ஃபெக்ஷன் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். ஃபைப்ராய்டு பாலிப் இருந்தாலும் இன்டர்மென்ஸ்டுரல் ப்ளீடிங் இருக்கலாம்.

இவையெல்லாம் பயப்படத் தேவையில்லாத பிரச்னைகள். சிலருக்கு கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பை வாய் அல்லது சினைப்பை புற்றுநோய் காரணமாகவும் இன்டர்மென்ஸ்டுரல் ப்ளீடிங் இருக்கலாம். இது மிகவும் ஆபத்தான விஷயம் என்பதால் உடனடி பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

இவற்றையெல்லாம் தாண்டி, ஸ்ட்ரெஸ் காரணமாகவும் இன்டர் மென்ஸ்டுரல் ப்ளீடிங் ஏற்படலாம் என்பதால் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழகுவது மிக அவசியம்.

எனவே எந்தக் காரணத்தால் உங்களுக்கு இந்தப் பிரச்னை வந்தது என்பதை மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகளின் மூலம் உறுதிசெய்த பிறகுதான் அதற்கேற்ற சிகிச்சையை மருத்துவரால் பரிந்துரைக்க முடியும். பெரும்பாலான காரணங்கள் பயப்படக்கூடியவை அல்ல என்பதால் எளிதில் குணப்படுத்திவிடலாம். புற்றுநோய் போன்ற காரணமாக இருந்தாலும் பயப்பட வேண்டாம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் முழுமையாக குணமாக முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com