சிக்கந்தர் ராசா அதிரடி சதம்… நெதர்லாந்தை வென்றது ஜிம்பாப்வே அணி

Share

உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வென்றுள்ளது. ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா அதிரடியாக சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதவுள்ள இந்த தொடரில்  8 அணிகள் நேரடியாக தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி பெற்றுள்ள 8 அணிகளாகும். அடுத்த 2 இடங்களுக்கு தற்போது ஜிம்பாப்வே, ஓமன், யு.ஏ.இ., வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

ஜிம்பாப்வேயின் ஹராரேயில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓடோ ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். விக்ரம்ஜித் 88 ரன்களும், ஓடோ 59 ரன்களும் சேர்க்க அடுத்து வந்த கேப்டன் எட்வர்ட்ஸ் 83 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி 315 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் ஜோய்லார்டும் கும்ப்ளே 40 ரன்களும், கேப்டன் கிரேக் எர்வின் 50 ரன்களும் எடுத்து அணிக்குசிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ் 58 பந்துகளில் 2 சிக்சர் 10 பவுண்டரியுடன் அதிரடியாக 91 ரன்கள் எடுத்தார். ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா 54 பந்துகளில் 8 சிக்சர் 6 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதையும் படிங்க – ஜிம்பாப்வே மைதானத்திலும் சி.எஸ்.கே. ரசிகர்… கவனம் பெறும் புகைப்படம்…

40.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஜிம்பாப்வே அணி 319 ரன்கள் எடுத்து  வெற்றி பெற்றது. 102 ரன்கள் குவித்த சிக்கந்தர் ராசா ஜிம்பாப்வே அணியின் முதல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் 4 புள்ளிகள் மற்றும் +1.126 நெட் ரன்ரேட்டுடன் குரூப் ஏ-யில் ஜிம்பாப்வே அணி முதலிடத்தில் உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com