டைட்டானிக் கப்பலை தேடி சுற்றுலா பயணம் – எப்போது, யாரால் தொடங்கப்பட்டது?

Share

சுற்றுலா, பெருங்கடல், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய ’டைட்டானிக் கப்பலை’ காண்பதற்காக, ஆழ்கடலில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகள் காணாமல் போயிருக்கும் சம்பவம் உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேருடன் கிளம்பிய ’டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், ஜூன் 19ஆம் தேதி ஆழ்கடலுக்குள் காணாமல் போயிருக்கிறது.

இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 110 ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் மூழ்கிய ‘டைட்டானிக்’ கப்பலை காண்பதற்காக, சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடியும் என்ற செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இந்த நிலையில் ‘டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல்’ குறித்தும், இத்தகைய ஆழ்கடல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த அதன் சுற்றுலா நிறுவனம் குறித்தும், இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்டு வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com