TNPL 2023: முருகன் அஷ்வின் பிடித்த அசத்தல் கேட்ச்; இந்திரஜித்தின் அதிரடியால் வென்ற திண்டுக்கல்!| TNPL : Dindugal Vs Madurai Match Report

Share

டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. நிஷாந்த் மற்றும் கௌஷிக் ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இவர்களுக்கிடையே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் வந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் நிஷாந்த் விக்கெட்டைக் கைப்பற்றினார் மதிவண்ணன். அடுத்து வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் பிறகு சுபோத்தும் விக்கெட்டை வீழ்த்த, திண்டுக்கல் டிராகன்ஸின் பௌலிங் தீயாய் எரிய ஆரம்பித்தது.

இந்திரஜித்

இந்திரஜித்

கடைசி ஐந்து ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பிரமாதமான பௌலிங், ஃபீல்டிங் என இரண்டுமே வெளிப்பட 123 ரன்களுக்குள் சுருண்டது மதுரை அணி. எளிய இலக்கை சேஸ் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிவம் மற்றும் விமல் குமார் களமிறங்கினர். நம்பிக்கையோடு பௌலிங் செய்த குர்ஜப்நீத் சிங் இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் காலி செய்தார். மீண்டும் அடுத்த ஓவரில் ஒரு விக்கெட் எடுக்க மதுரை அணி ஆட்டத்திற்குள் கம்பேக் கொடுக்கத் தொடங்கியது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com