சினிமா: ஆப்கன் போர் குறித்த ஹாலிவுட் சித்தரிப்புகள் உண்மையா? மேற்கத்திய வணிக பார்வையா?

Share

ஹாலிவுட் சித்தரிப்புகள் உண்மையா?

பட மூலாதாரம், Alamy

  • எழுதியவர், கரின் ஜேம்ஸ்
  • பதவி, பிபிசி கலாசாரம்

கை ஸ்டார்ட் ரிட்ச்சீ (Guy Stuart Ritchie)யின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி காவெனன்ட் (The Covenant)’ கடந்த ஏப்ரல் 21ல் வெளியானது. படம் முழுவதும் துப்பாக்கி சத்தமும், குண்டு வெடிப்பும் கலந்த காட்சிகள் பெருமளவு இடம்பெற்றுள்ள நிலையில், இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு திகில் அனுபவம் கிடைக்கும் என்பதே உண்மை.

இப்படத்தில் ஜேக் கில்லென்ஹால் ஜான் கின்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமெரிக்க ராணுவ அதிகாரியான ஜான் கின்லி, ஆஃப்கானிஸ்தானில் போர் நடைபெற்ற போது 2018ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய போது ஜான் கில்லியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் வழிகாட்டியான அகமது (டார் சலீம்) என்பவர் தான் அவரைக் காப்பாற்றினார்.

ராணுவ பணிகளை முடித்துக்கொண்டு கின்லி தாய்நாடு திரும்பிய பின், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களுக்கு உதவியதற்காக தாலிபான்கள் அகமதுவையும், அவரது குடும்பத்தினரையும் குறிவைத்துள்ளது அவருக்குத் தெரியவருகிறது. எனவே அவர் அகமதுவைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆஃப்கானிஸ்தான் திரும்புகிறார்.

இத்திரைப்படம் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படமாகும். ஆஃப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் நடந்த தாக்குதல்கள் குறித்த தகவல்களை திரைக்குக் கொண்டு வர முயன்ற மற்ற படங்களைப் போன்ற ஒரு படமாகவே இதுவும் இருக்கிறது. ஆஃப்கானிஸ்தானிலிருந்து கடந்த 2021ல் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com