‘கங்குலியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை…’ – பாக். முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்

Share

டெஸ்ட் போட்டி குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த சவுரவ் கங்குலியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியனுக்கான இறுதிப்போட்டி கடந்த 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

முன்பு கடந்த 2021 இல் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா கோப்பையை இழந்தது. இந்த முறை வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்ட நிலையில், இந்திய அணி ஏமாற்றத்தை பரிசாக அளித்தது. அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்டோர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இருந்தது.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை அதிகம் காணப்பட்டது. உலக சாம்பியன் மேட்ச் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,  ‘ரோகித் சர்மா மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அவரும் தோனியும் தலா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்கள். ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல. அது மிகவும் சவாலான தொடர். உலக கோப்பையை வெல்வதை காட்டிலும் ஐபிஎல் தொடர் மிகவும் கடினமானது. ஐபிஎல் தொடரில் நீங்கள் முதலில் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். அதற்கு பின்னர் பிளே ஆப் சுற்று இருக்கிறது.

இதையும் படிங்க – 22 பந்துகளில் 50 ரன்கள்… எம்.பி.எல். தொடரில் கலக்கும் ருதுராஜ் கெய்க்வாட்…

ஐபிஎல் தொடரில் ஒரு அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் 17 போட்டியில் விளையாட வேண்டும்.’ என்று கூறியிருந்தார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் அளித்துள்ள பேட்டியில், ‘பேட்டியில் உலகின் தலைசிறந்த வீரரிடம் இருந்து, டெஸ்ட் மேட்ச் தொடர்பாக இது போன்ற வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. லீக் கிரிக்கெட்டையும், சர்வதேச டெஸ்ட் போட்டியையும் எப்படி ஒப்பிட முடியும்? ஒப்பிடவே முடியாது. ஐபிஎல் போட்டியில் 4 சர்வதேச வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பார்கள். அந்த மேட்ச்சையும் கிரிக்கெட்டின் அடிப்படையாக இருக்கும் டெஸ்ட் போட்டியையும் எப்படி ஒப்பிட முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com