தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்குஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிசிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ”வடிவேலு காமெடினாலதான் அந்தப் படம் ஹிட்டாகல” – ஷாக் கொடுத்த சுந்தர்.சி
இந்த வழக்கில் தன்மீதான நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் செந்தில் பாலாஜி சார்பில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி, தீர்ப்பை நாளை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் காமெடி நடிகர் தாடி பாலாஜி செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய திருவண்ணாமலை மூக்குபொடி சித்தர் ஜீவ சமாதியில் வேண்டிக்கொண்டதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.