சென்னையில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் இன்று தொடங்கிய இந்த போட்டி வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை ஏ மற்றும் பி என 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் எகிப்து, கொலம்பியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், பி பிரிவில் இந்தியா ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். இதில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். மற்ற அணிகள் தொடரிலிருந்து வெளியேறி விடும்.
இதையும் படிங்க – பள்ளித் தோழியை கரம் பிடிக்கும் சி.எஸ்.கே. வீரர்… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து….
இன்று பி பிரிவில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணியின் அபே சிங், ஜோஷ்ணா சின்னப்பா, சவுரவ் கோசல் மற்றும் தன்வி கன்னா ஆகியோர் வெற்றி பெற்றனர். நாளை நடைபெறவுள்ள போட்டியில் தென்னாப்பிரிக்காவையும், வியாழன் அன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஜப்பானையும் இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.