குழந்தைகளுக்குப் பிடித்த வெரைட்டியான பர்கர் வீட்டிலேயே செய்ய வேண்டுமா..? இதோ ரெசிபி ..!

Share

பர்கர் என்றாலே குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டிஷ்களில் ஒன்றாக உள்ளதால் எப்போது கடைகளுக்குச் சென்றாலும் வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிக்கடி பீசா, பர்கர் போன்ற ரெசிபிகளைக் கடைகளில் சாப்பிடும் போது பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும். எனவே உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த ரெசிபிகளை வீட்டிலேயே ஈஸியா செய்து சாப்பிடலாம். இதோ எப்படி செய்யலாம்? என இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

பலாப்பழம் மற்றும் அவகோடா பர்கர் (Jackfruit and Avocado Burger):வெஜ், சிக்கன், முட்டை போன்ற பர்கர்கள் தான் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. வெரைட்டியாக பர்கர் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் பலாப்பழம் மற்றும் அவகோடா பர்கர் நல்ல தேர்வாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்:-

  • கீரை
  • அவகேடோ
  • தக்காளி துண்டு
  • பலாப்பழம்
  • உருளைக்கிழங்கு
  • வெள்ளரி துண்டுகள்
  • உப்பு
  • மிளகு
  • மையோனஸ்
  • வெண்ணெய் – தலா 1 டேபிள் ஸ்பூன்
  • பர்கர் பன் – 4
  • சீஸ் ஸ்லைஸ் – 4
  • நறுக்கிய வெங்காயம்
  • நறுக்கிய மிளகாய்

செய்முறை:

  • பலாப்பழம் மற்றும் அவகோடா பர்கர் செய்வதற்கு முதலில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து உருளைக்கிழங்களை மென்மையாகும் வரை சுட்டு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயை சூடாக்கி நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் பலாப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கலவையாக்கிக் கொள்ளவும்.
  • இதையடுத்து பர்கர் பன்னை வெண்ணெய் போட்டு சுட வேண்டும். இதன் அடிப்பாகத்தின் மேல் கட்லெட்டை வைத்து அதன் மேல் சீஸ் துண்டுகளை வைக்கவும். பின்னர் மயோனஸை தடவி வெங்காயம், தக்காளி துண்டுகள் மற்றும் அவகோடா பழங்களை மேல் தூவினால் போதும். சுவையான பலாப்பழம் மற்றும் அவகோடா பர்கர் ரெடி.
  • Also Read | breakfast pasta recipe : நொடியில் தயாராகும் பிரேக்பாஸ்ட் ரெசிபி… குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

    லேம் பர்கர் (Lamb burger):

    • பட்டர் பன்
    • மசித்த கறி
    • தக்காளி நறுக்கியது
    • வெங்காயம்
    • மயோனைஸ்
    • சீஸ்
    • எண்ணெய் – சிறிதளவு
    • வெண்ணெய்
    • கீரை
    • உப்பு மற்றும் மிளகுத்தூள்

    செய்முறை:

    • இதை செய்வதற்கு முதலில், ஒரு பாத்திரத்தில் மசித்த கறி, பூண்டு விழுது, உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையை வடை போன்று தட்டி பொரித்து எடுக்க வேண்டும்.
    • பின்னர் பர்கர் பன்னை எடுத்துக் கொண்டு கிடைமட்டமாக வெட்டிக் கொள்ளவும். இதையடுத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும். இதையடுத்து பர்கர் ரொட்டியின் இருபுறமும் மயோனைஸ் தடவி, பர்கர் ரொட்டியில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் அடுக்கி, பாட்டியின் மேல் செடார் சீஸை வைக்கவும். இறுதியில் லேசாக நறுக்கிய வெங்காயத்தை வைத்தால் போதும் சுவையான பர்கர் ரெடி.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com