கனிமொழி பக்கம் செல்கின்றனர்… அண்ணாமலை விமர்சனம்

Share

கருணாநிதியின் மகனாக இல்லாமல் இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகி இருக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ’புதிய அமைச்சர்கள் கூட வாரிசுகளாக நியமிக்கப்படுவதால், திமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மு.க.ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறினார். எனவே அவர்கள் கனிமொழியின் பக்கம் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், பாஜகவில் ஒரு பூத் கமிட்டி நிர்வாகி கூட, உயர்ந்த பொறுப்பிற்கும் வர முடியும் என குறிப்பிட்டார். அத்துடன், தனித் திறமையின்றி, கருணாதியின் பெயரை பயன்படுத்தியே ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் பாஜக 25 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று அமித்ஷா பேசியதற்கு அதிமுக மூத்த தலைவர்கள் செம்மலை, ஜெயக்குமார் ஆகியோர் கூறிய கருத்து குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 2024-ல் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதே தங்களது இலக்கு என்று கூறினார்.

இதையும் வாசிக்ககழிவு நீர் அகற்று லாரி உரிமையாளர்கள் தொடர் போராட்டம்- பேச்சுவார்த்தையில் இறங்கிய அதிகாரிகள்

இதற்கிடையே,  முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘அண்ணாமலை நாவடக்கம் இல்லாமல் அதிமுகவை விமர்சனம் செய்கிறார். மறைந்த தலைவர்கள் பற்றி தவறாக பேசாமல் இருப்பது வழக்கம். ஜெயலலிதாவை பிரதமர்கள் என பல முக்கிய நபர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

கத்து குட்டி அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள இவ்வாறு பேசி வருகிறார். அண்ணாமலை கருத்தால் ஒட்டுமொத்த தொண்டர்களுக்கும் மனம் பாதிக்கும் அளவுக்கு பேசியுள்ளார். இதற்கு அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும். கூட்டணி தர்மத்தை ஏற்கும் செயலாக இல்லை. மாநிலத் தலைவர் என்ற தகுதியும் இல்லாதவராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com