வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
எங்க வீட்டுக்கு திடீர்னு விருந்தினர் வந்திட்டாங்க.. எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை. அவங்க கிட்ட பேசவும் முடியல.. மனசுக்குள்ள ஏதாவது செய்யணும்ன்னு தோணுது.ஆனா என்ன செய்யறது ன்னும் புரியலைன்னு … நிறைய பேர் புலம்புவதைக் கேட்டதுண்டு.’
ஆனால் உண்மையாகவே விருந்தினர் எந்நேரம் வந்தாலும், அவர்களை வரவேற்கும் வகையில் எங்கள் வீடு தயாராகவே இருக்கும்.” உண்மை! உண்மை !உண்மை!! கோர்ட்டில் சொல்வது போல் மூன்று முறை சொல்லிவிட்டேன்.
பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி விருந்தினர்களை எதிர்பாராத அன்பாக வரவேற்று, ஆசையாக உபசரித்து, மகிழ்ச்சியாக சமைத்து என் கையாலேயே பரிமாறுவது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். சமையல்… ஒரு எனர்ஜி பூஸ்டர் எனக்கு..
இதற்காக சின்னச் சின்ன விஷயங்களை நான் பின்பற்றுவேன். முதலாவது, உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் நன்கு வேகவிட்டு தோல் உரித்து மசித்து குளிர்சாதன பெட்டியில் எப்பொழுதும் தயாராக வைத்திருப்பேன். விருந்தினர்கள் வரும் நேரத்தை பொறுத்து அவை உருளை வறுலலாக (மதிய சாப்பாடு.. உருளை போண்டாவாக ..மாலை நேரம்) உருளை கோஃப்தாவாக இரவு உணவுக்கு சப்ஜி.. இப்படி உருவத்திலும் சுவையிலும் மாறி விருந்தை அசத்தலாக்கும்.
இரண்டாவதாக,. இனிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பொடி தயார் செய்து வைத்திருப்பேன். தரமான சுத்தம் செய்த பச்சரிசி – 2கப்,
தரமான பாசிப்பருப்பு – ஒரு கப்
பொடித்த வெல்லம் -மூன்று கப்
ஏலக்காய்- 5
சிட்டிகை உப்பு.