18 மாத குழந்தைக்கு வெட்டுக்கிளியே உணவு… தாய் கூறும் திடுக்கிட வைக்கும் காரணம்! |Woman Feeds Crickets To her Toddler in order to reduce grocery bill

Share

குழந்தைகளுக்கு விதவிதமாக, பார்த்துப் பார்த்து உணவு வழங்கும் பெற்றோர் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தாய் ஒருவர் மளிகை சாமான் பில்லை குறைப்பதற்காக, தன்னுடைய 18 மாதக் குழந்தைக்கு, வெட்டுக்கிளிகளை உணவாக அளித்து வருகிறார்.

கனடாவின் டொரன்டோ பகுதியில் வசித்து வருபவர் டிஃப்பனி லெய்க் ( Tiffany Leigh). இவர் உணவுகளைக் குறித்து எழுதி வருகிறார். சமீபத்தில் ஆசிய நாடுகளுக்குச் சென்றவர், சிலந்தியின் கால்கள், தேள்கள் என பொறித்த அனைத்தையும் உண்டு மகிழ்ந்திருக்கிறார். அவற்றின் சுவையும் அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.

தன்னுடைய குழந்தை திட உணவு உண்ணும் நாளுக்காகக் காத்திருந்தவர், சிறுகச் சிறுக 18 மாதக் குழந்தையின் உணவில் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் (crickets ) சேர்த்துள்ளார். இது மிகவும் விலை மலிவாகவும், புரதம் நிறைந்த உணவாகவும் இருக்கிறது எனக் கூறியுள்ளார். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com