இளம் வீரராக அவர் சந்தித்த சிரமங்களிலிருந்துதான் இளம் வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்கிற பாடத்தை தோனி கற்றிருக்க முடியும்.
இளம் வீரர்களுடனான தோனியின் ஆலோசனை சார்ந்து தீவிர கிரிக்கெட் விமர்சகரான ஜாய் பட்டாச்சார்யாவின் பார்வை இது.
தோனியின் சொந்த அனுபவம் சார்ந்த படிப்பினை என்கிற ரீதியில் இது ஒரு முக்கியமான மதிப்பீடு. ஏனெனில், தோனி கேப்டனான தொடக்க காலத்தில் ஒரு பிரபலமான பிரஸ் மீட்டை நடத்தியிருந்தார். வழக்கமாக பிரஸ்மீட் என்றாலே கேப்டனோ பயிற்சியாளரோ அல்லது வீரர்களில் யாரோ ஒருவர் பங்கேற்பதே வழக்கம். ஆனால், தோனி அந்த பிரஸ்மீட்டிற்கு ஒட்டுமொத்த இந்திய அணியையும் அழைத்து வந்தார். காரணம், அணிக்குள் கேப்டனுக்கும் சில சீனியர் வீரர்களுக்கும் குறிப்பாக சேவாக்குக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்துதான் தோனி இந்த பிரஸ்மீட்டை நடத்தியிருந்தார். பட்டாச்சார்யாவின் வாதத்திற்கு வலுசேர்க்கும் அம்சங்கள் இதிலேயே இருக்கிறது.
ஒரு முறை இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராகவும் இருக்கும் நெஹ்ரா ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார்.
‘2004-05 அந்த காலக்கட்டத்தில்தான் தோனி இந்திய அணிக்கு அறிமுகமாகியிருந்தார். அந்த சமயத்தில் சச்சின், ஜாகீர், ஹர்பஜன், யுவராஜ் மற்றும் நான் என ஐந்து பேர்தான் ஒன்றாக உணவருந்த செல்வோம்.