அறுவைச் சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி
இந்த யானை நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்காவில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்தது. இந்த யானைக்கு பிஜயகஜ் என்று பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையில் யானையால் குட்டி ஈன முடியாததை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
அறுவை சிகிச்சை செய்தாலும் குட்டி யானை உயிருடன் பிறக்குமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.