Doctor Vikatan: தைராய்டு பாதிப்பு உள்ளவர்களால் எடையைக் குறைக்க முடியாது என்பது உண்மையா? | Doctor Vikatan: Is it true that people with thyroid problems cannot lose weight?

Share

சரியான ஃபிட்னெஸ் ஆலோசகரை சந்தித்து ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் பயிற்சிகள் உங்கள் தசைகளின் வலிமையை அதிகரித்து, உடல் எடை குறைந்து சரியான வடிவத்துக்குக் கொண்டு வர உதவும்.

தைராய்டும் பிசிஓடி-யும் உள்ள எத்தனையோ பெண்கள் ரெசிஸ்டன்ஸ் டிரெயினிங் மற்றும் உணவுப்பழக்கம் மூலமாக எடையைக் குறைத்ததை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். மகப்பேறு மருத்துவர்களிடம் இது குறித்துப் பேசும்போது அவர்கள் வலியுறுத்துவதும் இவற்றையே…. ஒருவேளை ஏற்கெனவே இந்த விஷயங்களைப் பின்பற்றி வருகிறீர்கள், ஆனாலும் எடை குறையவில்லை என்றால் நீங்கள் உடற்பயிற்சியை சரியாகச் செய்யவில்லை என அர்த்தம்.

எனவே எடைக்குறைப்பு முயற்சியைக் கைவிட்டவர்களின் ஆலோசனையையோ வேறு யாரின் பேச்சையோ கேட்டுக்கொண்டு நம்பிக்கையை இழக்காதீர்கள். உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இரண்டையும் சரியான நிபுணர்களின் வழிகாட்டுதலோடு மனம் தளராமல் பின்பற்றும்போது 100 சதவிகிதம் பலன் கிடைக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com