Doctor Vikatan: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can cooked food be heated?

Share

பொதுவாக உணவை சூடுபடுத்தும்போது, முதல்முறை சமைக்கிற அளவுக்கு, தீவிரமாக சூடுபடுத்த மாட்டோம். எனவே அந்த நிலையில், மீண்டும் உயிர்பெற்ற பாக்டீரியா சாகாது. அதன் விளைவாக அந்த உணவைச் சாப்பிடும் போது அது ஃபுட் பாய்சனாகிறது. இந்த விதி சிக்கன், மஷ்ரூம், உருளைக்கிழங்கு, பிரியாணி, சிக்கன் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

உணவில் நைட்ரேட் என ஒன்று இருக்கும். இது காலிஃப்ளவர், கீரை வகைகளில் அதிகம் இருக்கும். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது, இந்த நைட்ரேட், நைட்ரைட்டாக மாறும். அது புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதாவது கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்ட பலவித புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாகக் கூடியது நைட்ரைட்.

சமையல் | மாதிரிப்படம்

சமையல் | மாதிரிப்படம்

எனவே நிறைய சமைத்து, மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி, இதுபோன்ற ஆபத்துகளை வரவழைத்துக் கொள்வதற்கு பதில், அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக சமைத்துச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com