மூன்று ஃபார்மேட்டிலும் கேப்டனாக சதம் அடித்த இந்தியர்; முழுமையான டெஸ்ட் வீரராகிவிட்டாரா ரோஹித் சர்மா? | Rohit Sharma proved his class in Test Cricket with his century as a Captain

Share

கம்மின்ஸ் வீசி எதிர்கொண்ட தனது இன்னிங்ஸின் முதல் பந்தையே பவுண்டரியாக மாற்றித்தான் ஆட்டத்தைத் தொடங்கினார் ரோஹித். அந்த ஓவரிலேயே இன்னமும் இரண்டு பவுண்டரிகள் வந்து சேர்ந்தன. அங்கிருந்து கம்மின்ஸின் பந்துகள் மட்டுமல்ல லயானின் ஓவர்களும் அவரால் சூறையாடப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பாக ஓடி ரன் சேர்க்கத் திணறுகிறார் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில்லை என்ற குறை லிமிடெட் ஃபார்மேட்டில் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் இப்போட்டியில் அதிலும் அவர் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்தார்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா
Rafiq Maqbool

முதல் பாதி மொத்தமும் பௌலர்ளை அட்டாக் செய்து ஆடியிருந்தார். 66 பந்துகளில் அரைசதம் வந்தபோது எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடிக்கப்பட்டிருந்ததே அந்த ஆட்டத்தில் தெறித்த அக்ரஷனுக்கான குறியீடுகள். களத்தின் Uneven Bounce-ஐ கருத்தில் கொண்ட ஸ்வீப் ஷாட்டுகளை சென்னை இன்னிங்ஸ் போலில்லாமல் பெரும்பாலும் தவிர்த்திருந்தார். இரண்டாவது நாள் தொடர்ந்த அவரது இரண்டாவது பாதி ஆட்டத்திலோ நிதானமே நிரம்பியிருந்தது. மறுபுறம் விக்கெட்விழ அவருக்கான பொறுப்புகள் பல மடங்கு அதிகரித்தது. அதனையும் மிகச்சிறப்பாகவே கையாண்டார்.

வாழ்வில் பக்குவப்பட்ட மனிதன் அடுத்தடுத்து எடுத்துவைக்கும் அடிகள் அடுத்தகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் அவனை நகர்த்துவதாக இருக்கும். ரோஹித்தின் அணுகுமுறைகூட அப்படியானதாகவே இருந்தது. களம் மற்றும் நல்ல பந்துகளுக்கான மரியாதையும் அவரிடமிருந்து நிரம்பவே வெளிப்பட்டது. அதேசமயம் பயந்து அடிபணிந்தும் விடவில்லை. லயானின் பந்துகளை டவுன் தி டிராக்கில் இறங்கிவந்து பவுண்டரிக்கு அனுப்பியது முதல் கம்மின்ஸின் ஷாட் பாலில் தனது டிரேட்மார்க் புல்ஷாட் ஆடியதுவரை எனத் தனக்குள் இருந்த அக்ரஷனுக்கு அவ்வப்போது தீனிபோட்டுக் கொண்டார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com