ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு இரட்டை இலை குழப்பம் – சின்னம் பார்த்து தான் மக்கள் ஓட்டு போடுகிறார்களா?

Share

இரட்டை இலை

பட மூலாதாரம், Getty Images

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரண்டு துருவங்களாக பிரிந்திருக்கும் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான கவலையில் உள்ளன. இரு தரப்பும் தங்கள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் அல்லது யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்படுமா என்ற குழப்பத்துடனேயே தேர்தல் களத்தில் உள்ளன.

அதிமுகவில் அதிக செல்வாக்கு கொண்டிருக்கும் எடப்பாடி தரப்பு, ஆளும் திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதை தங்களுக்கான வெற்றியாக மாற்ற முடியும் என்று நம்புகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com