Doctor Vikatan: என் தோழியின் மகனுக்கு வயது 30. இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தபோது, முன் இருக்கையின் கம்பியில் மோதி பற்களில் அடிபட்டது. சில பற்கள் உதிர்ந்துவிட்டன. இன்னும் சில பற்கள் ஆடுகின்றன. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனுடைய நிலையைப் பார்த்து என் தோழி மிகவும் வருந்துகிறாள். அவனுக்கு பற்களை முன்பு போல சீராக்க முடியுமா? அதிக செலவாகுமா?
– அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி
முதல் வேலையாக உங்கள் தோழியின் மகனை பல் மருத்துவரை அணுகச் சொல்லுங்கள். மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு, பற்களின் நிலை அறிந்து தேவைப்பட்டால் ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைப்பார். எலும்புகளின் அடர்த்தி, பற்கள் தவிர வேறு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம்.