3 முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர்:
1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. இந்த தொடரில் பிரேசில் அணி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டது. பின்னர் 1970-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணிக்காக பீலே விளையாடினார். இந்த போட்டியிலும் அசத்திய பீலே,
வேறு எந்த வீரரும் மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது கிடையாது. கடந்த 1971ம் ஆண்டு பீலே சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்தார். யூகோஸ்லோவாகியா அணிக்கு எதிராக விளையாடியது அவரது கடைசி ஆட்டம்.
கால்பந்தில் இருந்து ஓய்வு:
சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தொடர்ந்து சான்டோஸ் அணிக்காக பீலே விளையாடினார். பின்னர் 1975-ம் ஆண்டு சொந்த விருப்பத்தின் பேரில், அமெரிக்காவின் நியூயார்க் காஸ்மோஸ் அணியில் இணைந்தார். இந்த அணிக்காக 3 சீசன்கள் விளையாடிய பீலே, 1977ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி கால்பந்தில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார்.
அன்றைய தினம் பீலே விளையாடிய இரு கிளப் அணிகளுக்கு இடையேயான ஒரு கண்காட்சி போட்டி நியூஜெர்சியில் நடந்தது. இந்த போட்டியில் முதல் பாதியில் காஸ்மோஸ் அணிக்காக விளையாடிய பீலே, பிற்பாதியில் சான்டோசுக்காக ஆடினார். போட்டி முடிந்ததும், நியூயார்க் காஸ்மோஸ் அணி பீலே அணிந்து விளையாடிய 10ம் எண் ஜெர்சிக்கு நிரந்தர விடை கொடுத்தது. இந்த போட்டியைக் காண பீலேவின் பெற்றோர்களும் நியூஜெர்சி வந்திருந்தனர். அந்த ஜெர்சியை வாங்கிய பீலே தனது பெற்றோர் கையில் கொடுத்து கண்ணீர் மல்க கால்பந்துக்கு விடை கொடுத்தார்.
பீலேவின் முதல் இந்திய வருகை
இதே ஆண்டில்தான் பீலேவின் நியூயார்க் காஸ்மோஸ் அணி கொல்கத்தா வந்தது. ஏடன் கார்டன் மைதானத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து அணியான மோகன் பகான் அணிக்கும், நியூயார்க் காஸ்மோஸ் அணிக்கும் மோதல் நடைபெற்றது. இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. பீலேவின் ஆட்டத்தை காண மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.