இலங்கையை விட்டு வெளியேறிய குடிமக்கள் மீண்டும் தாயகம் வருகை – குடிவரவு அதிகாரிகள் விசாரணை

Share

இலங்கை அகதிகள்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.


வியட்நாமிலிருந்து விசேட விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள், இன்று அதிகாலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


இவ்வாறு தாயகம் திரும்பியவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஹங்சிகா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


நாடு திரும்பியவர்கள் மத்தியில், 9 பெண்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com