யுஜிசி புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை ஏன்? நீதிபதி கூறிய காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images7 நிமிடங்களுக்கு முன்னர்பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாகுபாட்டைத் தடுக்கும் முயற்சியாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது. இந்த விதிகள் சிறிது காலமாக ஒரு தரப்பின் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.பிபிசி செய்தியாளர் உமாங் போடார் அளித்த தகவல்களின்படி, யுஜிசி ‘உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026’இன் விதிகளில் தெளிவின்மை இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்…









