மகாராஷ்டிரா தேர்தல்: 'நிலம், கார், வெளிநாட்டுப் பயணம்' – வாக்குறுதிகளை வாரி வழங்கும் வேட்பாளர்கள்!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருக்கின்றனர். புனே மாநகராட்சியில் சிவசேனா வேட்பாளர் ஒருவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வேட்புமனுவைக் கிழித்துச் சாப்பிட்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது.புனே மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு இலவசங்களையும், பரிசுகளையும் வாரி வழங்கி இருக்கின்றனர்.புனே ஒன்றாவது…









