குமரி: “விபத்துக்களால் பலியாகும் உயிர்கள்” நான்குவழிச் சாலை பணி முடியும் வரை கனிமவள லாரிகள் செல்ல தடை! | Kumari: Lives lost in accidents; Mineral trucks banned until four-lane road construction is complete
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. குண்டு கற்கள், எம் சாண்ட், ஜல்லி உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் லாரிகளால் குமரி மாவட்டத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும், உயிரிழப்பு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளன. நேற்று இரவு மார்த்தாண்டம் மற்றும் தக்கலை பகுதியில் கனிமவள லாரிகளால் விபத்து ஏற்பட்டது. களியல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கிறிஸ்துராஜ் என்பவர் மகள் ஹாட்லின் அபினா பைக்கில் சென்றார். தக்கலையில் சென்றபோது அவரது பைக்…








