Monthly Archives: September, 2025

ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட்டுடன் கதை முடியவில்லை… போராடி மீண்டெழும் அன்ஷுல் காம்போஜ் | The story with the Old Trafford Test did not work out – Anshul Kamboj struggles to recover

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டியில் தேவையில்லாமல் அணியில் சேர்க்கப்பட்ட அன்ஷுல் காம்போஜ், பாஸ்பால் இங்கிலாந்திடம் சிக்கி சின்னாபின்னமாகி முதல் டெஸ்ட்டிலேயே சரியான பாடம் கற்று கொண்டார். 18 ஓவர்களில் 89 ரன்களைக் கொடுத்து பென் டக்கெட் தூக்கிக் கொடுத்த ஒரே விக்கெட்டுடன் முடிந்தார். சரி இத்துடன் அவர் டெஸ்ட் வாழ்க்கை முடிந்தது என்றுதான் அப்போது பலரும் கருதினர். ஆனால் மீண்டு எழுவேன் என்று அவர் கடும் முயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.…

Edappadi palanisamy: “எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் நின்று வெற்றி பெற்ற ஒரே தொகுதி என்றால் அது ஆண்டிபட்டி” – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சுற்றுப்பயணத்தின் முதலாவதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி மக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆண்டிபட்டி தொகுதி இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய தொகுதி. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் நின்று வெற்றி பெற்ற ஒரே தொகுதி என்றால் அது ஆண்டிபட்டிதான். விவசாயிகள் நிறைந்த தொகுதி.திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதமாகிறது இந்த தொகுதிக்கு ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா? ஆனால் அதிமுக அப்படியல்ல. 2021ல் விவசாயிகளுக்காக பயிர்க் கடன் ரத்து செய்திருக்கிறோம், சொட்டு…

dhoni; yograj singh; தோனி, கபில் தேவ் ஆகிய முன்னாள் கேப்டன்களை யோகராஜ் சிங் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசியிருக்கும் யோகராஜ் சிங், “இது இர்ஃபான் பதான் பற்றியது மட்டுமல்ல. கம்பீர் இதுபற்றி பேசியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள்.சேவாக் அதை வெளிப்படையாகவே சொன்னார். தான் எப்படி ஈயைப் போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும்.யோகராஜ் சிங்அதேசமயம், தோனி பதிலளிக்க விரும்பவில்லை. ஒருவர் பதிலளிக்க விரும்பவில்லை எனில் குற்ற உணர்ச்சி இருக்கிறது.பிஷன் சிங் பேடி, கபில்தேவ், தோனி ஆகியோரைப்…

அதிமுக: எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததன் பின்னணியில் பாஜகவா? முழு விவரம்

கட்டுரை தகவல்தேர்தலில் வெல்லவேண்டுமானால் அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கட்சிக்குள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன். இதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக தமிழக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க. சொல்வது என்ன?மனம் திறந்த செங்கோட்டையன்வெள்ளிக்கிழமையன்று காலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் தொண்டர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்த அ.தி.மு.கவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், “கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தல்களில் கட்சியால் வெற்றிபெற முடியும். பத்து…

ஹாக்கியில் இந்தியா வெற்றி! | indian women team won in hockey

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்துடன் மோதியது. இதில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் உதிதா துஹான், டங்க் டங்க் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர். மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, தவுடம் சுமன்…

எலி கடித்து இறந்த குழந்தைகள்: “இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" – அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, “பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது.எலி கடிபல பிறவி குறைபாடுகள் உட்பட குடல் பிரச்னைகளும்…

BCCI: ரூ.3.17 கோடியிலிருந்து 3.50 கோடி – ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை உயர்த்திய பிசிசிஐ

டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது.மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.Dream 11இணையவழி பண…

காணொளி: ரஷ்யாவை நெருங்க முயலும் பாகிஸ்தான் – இந்தியா கவலைப்பட வேண்டுமா?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான்-ரஷ்யா உறவால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?காணொளி: ரஷ்யாவை நெருங்க முயலும் பாகிஸ்தான் – இந்தியா கவலைப்பட வேண்டுமா?33 நிமிடங்களுக்கு முன்னர்சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை திங்களன்று சந்தித்துப் பேசினார். அடுத்த நாளே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் புதினைச் சந்தித்தார்.அந்த சந்திப்பில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகளை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானும் ரஷ்யாவுடன் வலுவான உறவுகளை உருவாக்க…

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா! | Red-ball warrior Shubham Sharma

மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன் கிரிக்கெட் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! அதிசயம் ஆனால் உண்மை! 32 வயதை நெருங்கும் ஷுபம் ஷியாம்சுந்தர் சர்மா என்னும் இந்த அதிசய வீரர் மத்தியப் பிரதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் ரெகுலராக ஆடாதவர். 67 முதல் தரப் போட்டிகளில் இதுவரை 4,301 ரன்களை…

`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' – பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் அங்கு சென்றபோது மண் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. அவர்களை அஞ்சனா கிருஷ்ணா தன்னுடன் சென்ற போலீஸார் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால் கிராமத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு உள்ளூர் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தனர்.…

1 23 24 25 26 27 30