"பஞ்சாப் அணியில் நான் அவமதிக்கப்பட்டேன்; பணத்தை விடவும்…" – மனம் திறந்த கிறிஸ் கெயில்
இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிவேக சதம் (30 பந்துகளில்), அதிக சிக்ஸர் (357), ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (17), ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் (175 நாட் அவுட்) ஆகிய முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர் கிறிஸ் கெயில்.2009-ல் கொல்கத்தா அணியில் தனது ஐ.பி.எல் கரியரைத் தொடங்கிய கெயில், 2011 முதல் 2017 வரை பெங்களூரு அணிக்கு மட்டுமல்லாது ஐ.பி.எல்லுக்கே அதிரடி முகமாக ஜொலித்தார்.அதன்பின்னர், 2018 முதல் 2021 வரை பஞ்சாப் அணியில் விளையாடினார்.…









