Yearly Archives: 2023
எதிர்காலத்தில் இன்னொரு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் – எச்சரிக்கும் சீனாவின் பேட்வுமன்! |China scientist warns another coronavirus outbreak is likely
எனவே, எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, இவரது ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஷி ஜெங்லி எச்சரிக்கையில், “முன்பு ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றினால், அது எதிர்காலத்திலும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார உள்கட்டமைப்புகள் உலகளாவிய நிலையில் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஆய்வு குறித்த முடிவுகள், ஆங்கில பத்திரிக்கையான எமர்ஜிங் மைக்ரோப்ஸ் அண்ட் இன்ஃபெக்ஷன்ஸ்…
யூரிக் ஆசிட் அளவை அதிகரிக்கும் உணவுகள்… சுவைக்காக கூட சாப்பிடாதீங்க..!
நாம் ஆரோக்கியமான சுத்தமான உணவு முறையை கடைப்பிடித்தால் நிச்சயம் அதன் பலனை நாம் உணர முடியும். இதற்கெல்லாம் காரணம் செரிமான அமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் விளைவுகளே… நன்றி
காலில் தேங்காய் எண்ணெய் தடவினால் டெங்கு காய்ச்சல் வராதா… மருத்துவர்கள் சொல்வதென்ன?
சமீப நாள்களாக டெங்கு பாதிப்பு பெரிதும் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க பல வழிகள் இருப்பதாக, வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது… டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகள் என்ன?இது குறித்து, சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் விஷாலிடம் பேசினோம்… “டெங்கு பரவ முக்கிய காரணம் கொசு. டெங்கு பரப்பும் கொசு வகைகளால் அதிக…
Apollo Cancer Centre – 30th Anniversary: அப்போலோ கேன்சர் சென்டரின் பெருமிதமான மைல்கல் நிகழ்வு!
புற்றுநோய்க்கு உயர்சிகிச்சை வழங்குவதில் தளராத அர்ப்பணிப்பு உணர்வுடன் 30 ஆண்டுகள் செயற்பணி நிறைவடைந்திருப்பதையும் மற்றும் அதனோடு சேர்த்து உலக ரோஜா தினத்தையும் சென்னையிலுள்ள அப்போலோ கேன்சர் சென்டர் (ACC) கொண்டாடியது.புற்றுநோயை சிகிச்சை மூலம் வென்ற சாதனையாளர்களை பாராட்டி, கௌரவிக்கும் விதத்தில் ஒரு மாலை நேர ஒன்றுகூடல் நிகழ்வை இதற்காக ACC நடத்தியது. புற்றுநோய் சிகிச்சையில் புதிய தரநிலைகளை உருவாக்கியிருக்கும் ACC, மருத்துவ சிகிச்சை மற்றும் உட்கட்டமைப்பு முன்னேற்றம் ஆகியவற்றில் பல மைல்கற்களை கடந்திருக்கும் தனது சிறப்பான பயணம்…
இரண்டே நிமிடத்தில் ரசம் வைக்கனுமா..? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..!
சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு அலுத்து போனாலும் சரி, தயிர் சாதமே சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, சமைக்க நீண்ட நேரம் இல்லையென்றாலும் சரி. அனைவரும் சட்டென செய்ய நினைப்பது ரசம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பகூடிய இந்த டிஷ்ஷை செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்காது எனினும் காலை வேளையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இன்னும் சீக்கிரம் உங்களால் ரசம் வைக்க முடியும் என்றால் நன்றாகத்தானே இருக்கும். அதற்கு தான் இந்த ரசப்பொடி.…
Doctor Vikatan: அதிக சத்தத்துடன் ஏப்பம்… பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன?| Doctor Vikatan: Burping loudly…what is the solution?
சோடாவோ, ஏரியேட்டடு பானங்களோ குடிக்கிற வழக்கமே இல்லை, ஆனாலும் ஏன் இந்தப் பிரச்னை பாதிக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சிலருக்கு நடுத்தர வயது அல்லது அதற்குப் பிறகுதான் ‘லாக்டோஸ் இன்டாலரென்ஸ்’ எனப்படும் பால் ஒவ்வாமை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இரவு உணவுக்கு பனீர் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலோ, இரவு உணவுக்குப் பிறகு பால் குடித்தாலோ, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் காரணமாக ஏப்பம் வரலாம்.அடுத்தது ‘ஆசிட் ரெஃப்ளெக்ஸ்’ எனப்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை. நெஞ்செரிச்சல் பிரச்னையை நேரடியாக உணர மாட்டார்கள். ஆனால்…
இன்றைய டின்னருக்கு இந்த தந்தூரி சிக்கன் கத்தி ரோல் செய்து பாருங்க.. சுவை நாவிலேயே நிற்கும்
இரவு உணவுக்கு என செய்வது என்பதே பெரிய தலைவலி. இட்லி, தோசை, சப்பாத்தியை செய்து போர் அடிக்கும். வித்தியாசமாக கடையில் எதாவது வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அதுவே மாத கடைசி ஆகிவிட்டால், இருக்கும் பட்ஜெட் வைத்து எங்கே வெளியே சாப்பிடுவது? அப்போது வெளியில் சாப்பிட்ட டிஷ்களை வீட்டிலேயே செய்தால் என்ன என்ற எண்ணம் எழும்.அப்படி யோசிக்கும்போது என்ன செய்வது? எதை வீட்டில் எளிமையாக செய்யமுடியும். சுவையாகவும் இருக்க வேண்டும், அதிகம் செலவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்று…
செக்ஸ் உணர்வை ரொம்ப காலம் கன்ட்ரோல் செஞ்சா இப்படி நடக்கலாம்..! காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 106
காதலும் காமமும் இயற்கையான உணர்வுகள்… இந்த உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் வயதுகளில் அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பதே சரி. இயற்கையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வாழ்பவர்கள், அந்த உணர்வுகளை வெளிப்படுத்த வழி கிடைக்கையில் வேகவேகமாக இயங்கி, அதன் காரணமாக பிரச்னையில் சிக்கிக் கொள்வார்கள். இப்படிப்பட்டதொரு கேஸ் ஹிஸ்டரியைத்தான் இன்று நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். Sexologist Kamaraj“அந்த ஆணுக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும். அதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆணுறுப்பு உடைந்து, அதனுள்ளேயே ரத்தம் தேங்கிய ஆபத்தான நிலையில் என்னை…
கால்சியம் சத்து குறைபாட்டை போக்க உதவும் உணவுகள்… எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லது..!
உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. எலும்புகளை வலுப்படுத்த உடலில் கால்சியம் தேவைப்படுகிறது. இதை நிறைவேற்ற, பால், தயிர், சீஸ் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன. பாலில் கால்சியம் அதிகம் உள்ளது, ஆனால் சிலர் பால் குடிக்க விரும்புவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பாலுக்கு மாற்றாக கால்சியம் நிறைந்த சில உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்தவகையில் பால் அல்லாத கால்சியம் நிறைவாக இருக்கும் சில விதைகளைப் பற்றி கூறுகிறோம் நன்றி






