ஐபிஎல் டி20 கிரிக்கெட்: CSK vs RCB – தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எளிதான வெற்றி இழுபறியானது ஏன்?
பட மூலாதாரம், BCCI/IPLஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு ரோலர் கோஸ்டர் மேட்ச் நடந்து முடிந்தது. இரு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்த இந்த போட்டிகளில் கடந்த முறை எதிரணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை கட்டுப்படுத்த முடியால் தோல்வியைத் தழுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இம்முறை சேஸிங்கில் கோட்டை விட்டுள்ளது. 227 ரன்களைத் துரத்திய அந்த அணி, கேப்டன் டுப்ளெஸ்ஸி – மேக்ஸ்வெல் ஜோடி…








