543 மக்களவைத் தொகுதிகளே தொடர வேண்டும்: கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்|815 MPs? Karti Chidambaram Questions BJP’s Delimitation Plan

Share

மேலும், 815 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய நாடாளுமன்றம் ஒரு திறனற்ற நாடாளுமன்றமாகவே இருக்கும். எந்தவொரு உறுப்பினருக்கும் அர்த்தமுள்ள வகையில் பேசுவதற்குப் போதிய நேரம் கிடைக்காது.

அத்துடன், உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்கும் இடையே உள்ள இடைவெளி மேலும் அதிகரிக்கும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த “மொத்த எண்ணிக்கை’ மட்டுமே மிக முக்கியமானது.

தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதன் மூலம், பாஜக தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக தொகுதிகளைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வழியேற்படும்.

தொகுதி மறுவரையறையோடு மகளிர் இடஒதுக்கீட்டை இணைப்பது ஒரு அரசியல் தந்திரமே தவிர வேறில்லை. தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே பெண்களுக்கான 181 இடங்களை தாராளமாக உறுதி செய்ய முடியும்.

எனவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே வைத்திருக்க வேண்டும்; மேலும், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய தொகுதிப் பங்கீடே தொடர வேண்டும்”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com