“உண்மையில் நடப்பது எதுவும் தெரியாது” – மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கங்குலி கருத்து | Sourav Ganguly about wrestlers protest
புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து உண்மையில் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என்று சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…









