கேரளாவில் படகு கவிழ்ந்து 11 பேர் மரணம்; படகை உடைத்து மீட்புப் பணிகள் தீவிரம்!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தானூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் கடற்கரை சுற்றுலா தலமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரையில் குவிந்தனர். கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள தூவல் ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி நடைபெற்று வருகிறது.இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டனர். படகு புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரம் சென்றதும் ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து…








