"வீட்டுக்கு வீடு குழாய் மூலம் மது விற்பனை செய்யும் நிலையை திமுக அரசு உருவாக்கும்!"- ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.ஆர்.பி.உதயகுமார்நிகழ்ச்சியில் பேசியவர், “இந்திய அரசியலில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பெற்று கொடுத்தார். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது, அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு தி.மு.க அனுப்பவில்லை.ஜல்லிக்கட்டு உரிமையை…








